தாஜுடீனின் படுகொலை தொடர்பில் பிரிட்டன் நிபுணர்கள் குழு உதவி
பிரபல ரக்பி வீரர் வசிம் தாஜுடீனின் படுகொலை தொடர்பில் முக்கிய தகவல்களை பெறுவதற்கு பிரிட்டன் நிபுணர்கள் குழுவொன்று உதவி வழங்கியுள்ளது.
தாஜூடீனின் படுகொலை குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு மிகவும் சவாலானவையாக தோன்றிய நிலையில் அவர்கள் பிரிட்டனின் நிபுணர்களின் துணையுடன் படுகொலை தொடர்பில் முக்கிய விடயங்கள் கண்டுபிடித்தனர்.
கையடக்கத்தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமொன்றிடமிருந்து தொலைபேசி உரையாடல் பதிவுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை வந்திருந்த பிரிட்டனின் தொழில்நுட்ப நிபுணர்கள் இந்த கொலை தொடர்பிலான இரு முக்கிய உரையாடல்களை கண்டுபிடித்தனர்.இதன் மூலம் இலங்கை பிரபல இளம் அரசியல்வாதியொருவர் இந்த விடயத்தில் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
Share this article :
முக்கிய குறிப்பு:
Rajarata Media இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு Rajarata Media நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
